இலங்கை செய்தி

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிர்ப்பு – யாழில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு
தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது பெருமளவில் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தாபல் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து வழங்கியிருந்தனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!