இலங்கை செய்தி

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இன்று இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காட்டப்பட்டன.

முன்னாள் அமைச்சர்களைத் தவிர சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோரே இவ்வாறு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளாவர்.

இதன்போது, அனைத்து பிரதிவாதிகளையும் பிணையில் விடுவித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, வழக்கை மீண்டும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!