ஐரோப்பா

பிரபல தீவுக்கு போதைப்பொருள் கடத்தல் : ஆசிய நாடொன்றில் பிரித்தானியர்கள் கைது!

பாலி தீவுக்கு போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் இந்தோனேசிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

லிட்டில்ஹாம்ப்டனைச் (Littlehampton) சேர்ந்த 29 வயதான கியால் கார்த் ராபின்சனுக்கு (Kial Garth Robinson) 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிச்செஸ்டரைச் (Chichester) சேர்ந்த 48 வயதான பிரன் எஸ்ரா வில்கின்சனுக்கு (Piran Ezra Wilkinson) ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சுமார் £45,000 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 190 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நுகுரா ராய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள்  வழமையான சோதனை நடவடிக்கையின்போது கியால் கார்த் ராபின்சனிடம்  (Kial Garth Robinson) இருந்து 1.3 கிலோ கோகைன் பொட்டலங்களை கண்டுப்பிடித்ததை தொடர்ந்து அவரை கைது செய்திருந்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பொட்டலங்களை வில்கின்சனுக்கு  வழங்குமாறு தனக்கு பணிக்கப்பட்டதாக கூறினார்.

அவரின் வாக்குமூலத்திற்கு அமைய வில்கின்சன்   பாலியின் தெற்கு கடற்கரையில் உள்ள காங்குவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனை குறித்து பதிலளித்த இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம், “இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம், மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!