ஐரோப்பா செய்தி

இடைத்தேர்தலில் பசுமைக் கட்சி அதிரடி வெற்றி -தொழிற்கட்சி முதன்முறையாக தோல்வி

கோர்டன் மற்றும் டென்டனில் (Gorton and Denton) நடைபெற்ற இடைத்தேர்தலில் பசுமைக் கட்சி அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

கட்சித் தலைவர் (சாக் போலன்ஸ்கி) Zack Polanski இந்த வெற்றியை “நில அதிர்வு” வெற்றி என கூறியுள்ளார்..

கிரேட்டர் மான்செஸ்டர் தொகுதியின் புதிய எம்.பி.யாக 34 வயதான பிளம்பர் Hannah Spencer, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் சீர்திருத்த UK (Reform UK) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தொழிற்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 1931 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் தொழிற்கட்சி தோல்வியடைந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு பிரித்தானிய அரசியலை முன்பைவிட அதிக நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என
கருத்துக்கணிப்பு நிபுணர் John Curtice தெரிவித்துள்ளார்.

இதேவேளை “இந்த முடிவு ஒரு விழித்தெழுதல் அழைப்பாக இருக்க வேண்டும்,” என தொழிற்கட்சியின் முன்னாள் துணைப் பிரதமர் Angela Rayner தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீர்திருத்த UK கட்சியின் தவிசாளர் David Bull, தனது கட்சியின் செயல்பாட்டில் “முழுமையாக மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.

இதனிடையே, தேர்தல் அவதானிப்பாளர்கள் “மிக உயர்ந்த” குடும்ப வாக்களிப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப வாக்களிப்பு என்பது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொருவருக்குப் பதிலாக வாக்களிப்பது அல்லது வாக்குச்சாவடியில்
சேர்ந்து சென்று ஒருவரின் வாக்கு தீர்மானத்தை மற்றொருவர் பாதிக்க முயல்வது போன்ற செயல்களை குறிக்கிறது.

இத்தகைய நடைமுறை, வாக்கின் இரகசியத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்பதால், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!