பிளவுப்பட்டிருந்த உறவில் முன்னேற்றம் : சீனாவுடனான உறவு தொடர்பில் ரூபியோ கருத்து!
அமெரிக்காவும் சீனாவும் நீண்டகாலமாக பிளவுப்பட்டிருந்த உறவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியதை தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறவில் குறைந்தபட்சம் ஒரு வகையான மூலோபாய ஸ்திரத்தன்மையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் இரு தரப்பினருக்கும் உலகிற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று இரு நாடுகளும் புரிந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனா நீண்டகாலமாக அமெரிக்காவின் பொருளாதார எதிரியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





