ஐரோப்பா

ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த பிரித்தானியா!

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்தத் தடைகள் ரஷ்யாவின் முக்கியமான நிதி, இராணுவ உபகரணங்கள் மற்றும் வருவாய் ஓட்டங்களை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொண்டு செல்லும் டிரான்ஸ்நெஃப்ட்  (Transneft) மற்றும் ரஷ்யாவின் ‘நிழல் கடற்படையின்’ ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்ட 48 எண்ணெய் டேங்கர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்துவதாக அரசாங்கம் கூறுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் எரிசக்தி ஏற்றுமதி வருவாய் 27 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!