இலங்கை செய்தி

சுரேஷ் சலே கைது: பொலிஸார் கூறுவது என்ன?

விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் E.U. Woodler மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார்.

“ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய வெளியாகியுள்ள உறுதியான சாட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்படுவார்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!