புதிய கட்சி தொடங்கினார் சசிகலா!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை வி.கே. சசிகலா V.K. Sasikala நிறுவியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.
ஊழல் வழக்கில் 2017 ஆம் ஆண்டு அவர் சிறை சென்றதால், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami கைப்பற்றினார்.
அதன்பின் டிடிவி தினகரன் TTV Dinakaran , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் O. Panneerselvam போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தாலும் அவருக்கு அதிமுகவில் இடமளிக்கப்படவில்லை.
எனினும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஓரணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என சசிகலா சபதம் செய்தார்.
எனினும், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சசிகலா புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவத்தை தாங்கி நிற்கின்ற கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்சி பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என சசிகலா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக செயல்பட்ட சசிகலாவை, அதிமுகவினர் சின்னம்மா என்றே அழைத்துவந்தனர்.





