வெனிசுலாவில் கைதிகள் விடுதலை விவகாரம் : முன்னுக்குப்பின் முரணாக வரும் தகவல்கள்!
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 540 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபோரோ பெனல் ( Foro Penal) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 20 அன்று பொது மன்னிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 91 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே புதிய பொது மன்னிப்புச் சட்டம் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 2,200 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்க தரப்பில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் மற்றும் , பொது அமைப்பிடம் இருந்து வரும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக காணப்படுகின்றன.
விடுதலைச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நடைமுறை இல்லாமையால் உண்மை தகவல்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.





