உலகம்

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆஸ்திரேலிய பிரதமர்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese’) தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கான்பெராவில் உள்ள அல்பானீஸின் இல்லத்தில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையான பாதுகாப்பு சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சமூகத்திற்கோ அல்லது பொதுப் பாதுகாப்புக்கோ தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், பிரதமரை வெளியேற்றுவது அதிகாரிகளின் “குறிப்பிடத்தக்க நடவடிக்கை” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அல்பானீஸ் சமீபத்தில் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.

அதேபோல் அரசியல்வாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல், தொல்லை, தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் கருத்துக்கள் தொடர்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், சுமார் 1009 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை  அண்மையில் இடம்பெற்ற செனட் சபை கூட்டமொன்றில், வன்முறை குற்றவாளிகள் அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களை குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!