பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோவின் வழக்கு குறித்து ஆய்வு செய்யும் ICC நீதிமன்றம்!
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே ( Rodrigo Duterte) போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக முன்னெடுத்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விசாரணை இன்று முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், விசாரணை நடத்தவும் போதுமான ஆதாரங்கள் உள்ளதா என்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்.
இருப்பினும் மேற்படி விசாரணையின்போது அவர் முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதிகளின் முடிவை அறிவிக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஐ.சி.சி.யை பலமுறை சபித்துள்ள டுடெர்ட்டேவுக்கு இந்த வழக்கு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது, மேலும் போதைப்பொருட்களுக்கு எதிராக அவர் முன்னெடுத்த 06 ஆண்டுகால போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





