ஈரான் விவகாரம் – பொறுமையிழக்கும் ட்ரம்ப்!
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமை இழந்து வருவதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஈரரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இல்லையென்றால் கெட்ட விஷயங்களை” எதிர்கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர். மெக்மாஸ்டர் (H.R. McMaster), “ஈரானிய ஆட்சிக்கு எதிரான தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை” முன்னறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!





