அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் சரணடைவு”: பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கு நாமல் பதிலடி!

“ நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பொன்சேகா கூறும் விடயம் புதிய தகவல் அல்ல.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka கொழும்பில் நேற்று (18) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

இறுதிப் போர் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய தகவல்களையும் வெளியிட்டார் இதன்போது கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா,

“ விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சரணடைய அனுமதிக்க, ராஜபக்ச குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், இராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் மறுத்ததுடன், மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்புவதாக கூறினர்.

தொலைபேசி உரையாடலின்படி, விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்த்தனர்.

அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்று விரும்பினர்.

இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால், திட்டம் தோல்வியடைந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

அவர் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இராணுவம் இருந்தது.” எனவும் பொன்சேகா கூறி இருந்தார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் இன்று (19) கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

“ புலிகள் ஆயுதத்தை வைத்துவிட்டு, சரணடைய வேண்டும் என்ற விடயத்தை போர் காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஊடகங்கள் வாயிலாக குறிப்பிட்டிருந்தார். எனவே, இது புதிய விடயம் அல்ல.

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை மஹிந்த ராஜபக்ச கொலை செய்ய சொன்னார் என முன்னர் கூறிய பொன்சேகா, தற்போது மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார்.

எது எப்படி இருந்தாலும் ராஜபக்ச கொலையாளி இல்லை என்பதை நிரூபித்த பொன்சேகாவுக்கு நன்றிகள்.

பாரிய இழப்பு மற்றும் உயிர் சேதங்கள் இன்றியே மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவர முற்பட்டார்.” என கூறினார் நாமல் ராஜபக்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!