விளையாட்டு

ICC T20 World Cup 2028: 12 அணிகள் நேரடியாகத் தகுதி!

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ICC T- 20 உலகக்கிண்ண தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

2028-ம் ஆண்டு ICC Men’s T20 World Cup தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

மேற்படி தொடருக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள் விபரம்,

1. இங்கிலாந்து – England

2. மேற்கிந்திய தீவுகள் – West Indies

3. இலங்கை – Sri Lanka

4.பாகிஸ்தான் – Pakistan

5. தென் ஆப்பிரிக்கா – South Africa

6. சிம்பாப்வே – Zimbabwe

7.இந்தியா – India

8.நியூசிலாந்து – New Zealand

9.ஆஸ்திரேலியா – Australia

10. ஆப்கானிஸ்தான் – Afghanistan

11. பங்களாதேஷ் – Bangladesh

12. அயர்லாந்து – Ireland

2028 T20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் களம் காண உள்ளன.

மேற்படி 12 அணிகள் தவிர, மீதமுள்ள 8 இடங்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக், மற்றும் அமெரிக்கா ஆகிய மண்டலங்களில் நடைபெறும் தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும்.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா 2 அணிகளும், ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்து இணைந்து 3 அணிகளும், அமெரிக்கா பகுதியிலிருந்து 1 அணியும் தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!