சிறிதரனின் கதிரைக்காக சபையில் அர்ச்சுனா சண்டை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இரா. சாணக்கியன் Chanakyan நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதரன் Siridaran எம்.பிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. Arjuna கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி.,
“எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே எதிரணியில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்படியானால் சிறிதரனுக்கு எந்த அடிப்படையில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உறுப்பினருக்கு அந்த இடம் வழங்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்,
“எதிரணியில் உள்ளி சிரேஷ்ட உறுப்பினர்தான் சிறிதரன். உறுப்பினர்களுக்கு ஆசனம் ஒதுக்கும் உரிமை எனக்கு உள்ளது.” என்று குறிப்பிட்டார்.
அதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றi எழுப்பிய சாணக்கியன் எம்.பி.,
“எமது கட்சிக்குரிய ஆசனங்களைப் பற்றி நாம் பார்த்துக்கொள்கின்றோம்.
எமது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு ஆசனங்களை நாம் முறையாக பகிர்ந்துள்ளோம். எமது கட்சி விவகாரம் பற்றி அர்ச்சுனா கவலைப்பட வேண்டியதில்லை.” என்று பதிலடி கொடுத்தார்.





