ஈரானில் தனது பிள்ளையை கொல்லும் தோட்டாவிற்கு பணம் செலுத்திய பெற்றோர்!
ஈரானில் சமீபத்தில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில், தனது மகனை கொல்ல பெற்றோரே தோட்டாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான மகன் ஹூமானை (Hooman) கொல்லும் தோட்டாவிற்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹூமன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துமனையில் உள்ள கொள்கலன் ஒன்றில் அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
குறித்த உடலை பெற்றுக்கொள்ள வெடிமருந்துகள் மற்றும் பிணவறை கட்டணம் போன்ற செலவுகளைச் செலுத்த பெற்றோர் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பேசுவதைத் தடுக்கும் ஆவணங்களில் கையெழுத்திடவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹூமன்போல் பல குடும்பங்கள் உடல்களை பெற்றுக்கொள்ள பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இது பெற்றோரே தனது பிள்ளையை கொலை செய்ய பணம் வழங்கியதற்கு சமமாகிறது.
இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், இந்த அடக்குமுறையின் அளவிற்கு மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





