ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்க லிபரல் கட்சி திட்டம்!

ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Angus Taylor, தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குரிய உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதற்கமைய ஆஸ்திரேலியாவுக்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்போகிறாராக உறுதியளித்துள்ளார்.

“Australia வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என்று Angus Taylor எச்சரித்துள்ளார்.

தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்காலத்தில் குடியேற்ற விண்ணப்பதாரர்களின் பின்னணி புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும், நாட்டின் மதிப்புகளுக்கு முரணான எண்ணங்களை கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட Susan Ley, தனது காலகட்டத்தில் மிகவும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமுல்படுத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!