பொழுதுபோக்கு

ஸ்மிருதி மந்தனா–பலாஷ் முச்சல் திருமண விவகாரம் – முச்சல் குறித்து பொதுவெளியில் கருத்து வெளியிட தடை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.

பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என தகவல்கள் வெளியாகின.

இதனிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகமொன்றுக்கு
அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.

அதில் கருத்து தெரிவித்த அவர், “2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத்தில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன்.
பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.

பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் 40 இலட்சம் ரூபா வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்த முச்சல், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 10 கோடி ரூபா நஷ்டஈடு கோரி விக்ஞான் மானே மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு வணிக ரீதியானது என்றும்,
திருமணத்தை கலைத்தல் போன்ற தனிப்பட்ட விடயங்களுடன் அதை இணைப்பது பொருத்தமற்றது என்றும் கூறியது.

விக்யானின் கருத்துக்கள் அவதூறானவை என்று கூறி, முச்சல் குறித்து பொதுவெளியில் அவர் கருத்து வெளியிட தடை விதித்தது.

மேலும், விக்யான் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள்
அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை மார்ச் 11 க்கு ஒத்திவைத்தது.

Sainth

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!