ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையா? – மனம் திறந்த ட்ரம்ப்!
ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கில் (Fort Bragg) ட்ரம்பிடம், ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “அது நடக்கக்கூடிய சிறந்த விஷயமாகத் தெரிகிறது” என்றுக் கூறினார். “47 ஆண்டுகளாக, அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் பேசும்போது நாம் நிறைய உயிர்களை இழந்துவிட்டோம். கால்கள் உடைந்தன, கைகள் உடைந்தன, முகங்கள் உடைந்தன. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.





