அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைக்கிறது – ஈரான் பாதுகாப்புத் தலைவர்
அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சிக்கிறது என ஈரான் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் பிராந்தியத்தில் புதிய போர் சூழல் உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “எங்கள் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் மட்டுமே, இஸ்ரேலுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இஸ்ரேல் நாசமாக்கும் நோக்கத்துடன் குறைமதிப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து கத்தாரில் நடந்த தாக்குதல், பிராந்திய அமைதியை பாதித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அணுசக்தி குறித்த மோதலை தீர்க்கும் முயற்சியாக ஈரான் மற்றும் அமெரிக்கா வெள்ளிக்கிழமை ஓமானில் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.





