இலங்கை செய்தி

ஆளுங்கட்சிக்கு நேசக்கரம் நீட்டி பதவியை இழந்த பெண் அரசியல்வாதி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் SLMC கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார்.

இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்த மாநகர சபை உறுப்பினர் பதவியும் வெற்றிடமானது.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10A(1)(a) பிரிவின் கீழ், கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி அத்திகலவினால் (Piumi Attygalle) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியிடப்பட்ட 2475/05 இலக்க விசேட வர்த்தமானி மூலம், சுஹரா புகாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இல்லாது போனமையால், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!