சவூதியுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இலங்கை!
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பாதுகாப்பு பிரதி அமைச்சர்களின் இரு தரப்பு சந்திப்பு ரியாத் நகரில் நடைபெற்றுள்ளது.
உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (World Defence Show – WDS பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara சவூதி Saudi Arabia. சென்றுள்ளார்.
இதன்போதே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கை–சவூதி அரேபியாவுக்கிடையிலான நட்புறவு மிக்க இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.
அத்துடன், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையில் இராணுவப் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல், தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அறிவுப் பகிர்வு முயற்சிகளை மேம்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஆளற்ற விமானங்கள் ((UAV), உளவுத்துறை அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு திறன்கள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புத் தொழிநுட்பங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.





