ஐரோப்பா

உக்ரைனில் தேர்தலை அறிவிக்க தயாராகும் ஜெலென்ஸ்கி : ஆட்சி மாற்றம் போரை தணிக்குமா?

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தேர்தல் மற்றும் வாக்கெடுப்பை அறிவிக்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

மோதலின் நான்காவது ஆண்டு நிறைவான பிப்ரவரி 24 அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா ஜூன் மாதம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆட்சி மாற்றம் சாதகமான நிலைமையை கொண்டுவரும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, இந்த நிபந்தனையை கியேவ் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது.

இதற்கிடையே கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான போக்ரோவ்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!