லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழை வீழ்ச்சி – மஞ்சள் எச்சரிக்கை
லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது நண்பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் ஆதரவு குழுக்கள் களத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வாரத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் மீண்டும் பலத்தமழை எதிர்பார்க்கப்படுகிறது.
வாரத்தின் நடுப்பகுதியில் குளிரான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து மலைகளில் சிறிது காலத்திற்கு பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெயிலுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகுிறது.





