இலங்கை செய்தி

வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு: விசாரணை தீவிரம்!!

திருகோணமலை மொரவெவ- அவ்வைநகர் Morawewa-Avvainaga பகுதியில் வாய்வெடி உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானையின் வாய் வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார்,

வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இருந்த போதிலும் மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இன்றுடன் மொத்தமாக ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.

மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருற்களை பாவித்து மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!