இலங்கை செய்தி

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 21 வயது இளைஞன் – அறுவர் கைது

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட அறுவர் கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!