போராடி தோற்றது நெதர்லாந்து! பாகிஸ்தான் அணி வெற்றி!!
T20 உலக்கிண்ண தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் போராடி தோற்றது நெதர்லாந்து அணி.
கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து அச்சுறுத்தியதால் போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்கவில்லை.
T-20 உலக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமானது.
முதல் ஆட்டத்தில் ‘குரூப்-ஏ’ பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இதற்கமைய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
148 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது.
19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்று எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.





