பொழுதுபோக்கு

கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார் ரஜிஷா!

சினிமா உலகில் தனக்குரிய செல்வாக்கு – ஆதரவு தளம் சரியும் பட்சத்தில் , அதனை நிலை நிறுத்திக்கொள்வதற்கு நடிகைகள் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுப்பது வழமை.

இந்நிலையில் மற்றுமொரு நடிகையும் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து, குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.

மாரி செல்வராஜ் Mari Selvaraj இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் கர்ணன் .

இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கேரள நடிகை ரஜிஷா விஜயன்.

தொடர்ந்து சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ மற்றும் கார்த்தி நடித்த ‘சர்தார்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக கடந்த தீபாவளிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமுக்கு அக்காவாகவும், பசுபதிக்கு மகளாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில், மலையாளத்தில் இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள உருவாகியுள்ள ‘மஸ்திஸ்கா மரணம்’ என்ற படத்தில் ‘கோமல தாமரா’ என்ற கவர்ச்சி பாடலில் ரஜிஷா விஜயன் நடனமாடியுள்ளார்.

குடும்பப்பாங்கான எதார்த்தமான வேடங்களில் நடித்து வந்த ரஜிஷா முதல் முறையாக கவர்ச்சியில் களம் இறங்கி உள்ளார். அவரது ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!