IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் ஜெர்மனி!
சர்வதேச ஆதரவுடன் உக்ரைன் தனது வான் பாதுகாப்பு வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெர்மனி நேற்று ஒன்பதாவது IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
IRIS-T ஏவுகணை அமைப்பானது 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஜெர்மனி தலைமையிலான திட்டத்தால் உருவாக்கப்பட்டது.
விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தற்போது IRIS-T ஏவுகணை அமைப்பின் இரண்டு வகைகளை பயன்படுத்துகிறது. ஒன்று 12 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. மற்றொன்று 08 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
இவற்றைவிட அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய IRIS-T ஏவுகணைகளும் உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஆகியோரால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு ஆதரவாக €11.5 பில்லியனை ஒதுக்க ஜெர்மனி உறுதியளித்துள்ளது. இது கியேவின் (Kyiv) நீண்டகால பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





