ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் விந்தணுக் கொடையாளரால் பாதிக்கப்பட்டுள்ள 200 குழந்தைகள்!

டென்மார்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்துடன் வாழும் நபர் ஒருவர் விந்தணுக்களை தானம் செய்ததன் காரணமாக சுமார் 200 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தானம்  செய்த குறித்த நபர் TP53 என்ற மரபணு மாற்றத்தை கொண்டிருந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது 60 வயதிற்கு முன்பே புற்றுநோய் உருவாகும் அபாயத்தை 90 சதவீதம் வரை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நன்கொடையாளர் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

சில குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்  எஞ்சிய குழந்தைகளில் சிலர் மாத்திரமே உயிர் பிழைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விந்தணு இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை. இருப்பினும் சில பிரித்தானிய தம்பதியர் டென்மார்க் நாட்டில் வைத்து விந்தணுவை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்கொடையாளர் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது சில செல்களில் உள்ள டிஎன்ஏ உருமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி TP53 என்ற மரபணு சேதடைந்துள்ளதாகவும், இது புற்றுநோயை தடுப்பதற்கு முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்