இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலர் மண்ணுக்குள் புதையுண்டனர். அதிலிருந்து பலரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

எனினும், மீட்கப்படாத சடலங்களில் இருந்தே இந்த துர்நாற்றம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேரிடர் என்பதால், மண்ணுக்குள் அனேகமான சடலங்கள் புதையுண்டிருக்கலாம் என்பதை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவை ஏற்றுக் கொண்டார்.

எனினும், புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் உடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் எவ்வித தொற்று நோய்களும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்