ட்ரோன் மழை பொழிந்த உக்ரைன் – இருளில் மூழ்கிய ரஷ்யா!
ரஷ்யா மீது உக்ரைன் நேற்று இரவு ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் பரவலான தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ரஷ்யாவின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வோல்கோரோட் (Volgorod) மற்றும் குர்ஸ்க் (Kursk) உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதால் பல பகுதிகள் மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரேனிய நகரங்கள் மீதான கிரெம்ளின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





