இலங்கை

இலங்கையில் இரண்டு நாட்களில் 8000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமைக்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரப்படி கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” ஒரு பவுண்டு தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, இது 283,000 ரூபாவாகக் காணப்பட்டது.

இதற்கிடையில், சனிக்கிழமை 306,000 ரூபாவாக இருந்த “24 காரட்” ஒரு பவுண்டு தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்