கெட்டவார்த்தைகளை பேசித்தான் கதாநாயாகி ஆனேன்! அதிர்ச்சியடைந்து விட்டீர்களா???
‘வடசென்னை’ படத்திற்கான தேர்வில் பங்கேற்றபோது அதன் இயக்குநர் வெற்றிமாறன் தம்மை கெட்ட வார்த்தைகள் பேசி நடிக்கச் சொன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
மேலும்“தெரிவின்போது எனக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசுமாறு இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாகவும் அதைக் கேட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
நான் எப்படி கெட்ட வார்த்தைகளைப் பேசி நடிக்க முடியும் என்று அவரிடம் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ‘முதலில் நீ பேசும்மா’ என்றார்.
வேறு வழியின்றி துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசினேன்
நான் கெட்ட வார்த்தைகளை உச்சரித்த விதம் இயக்குநருக்குப் பிடித்துப் போனதாம், அதனால் தான் எனக்கு அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “நீதான் இந்தப் படத்தின் கதாநாயகி” என்று அவர் தெரிவித்தபோது, நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன் என்றார்.
‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து அவரிடம் எந்த தயக்கமும் இன்றி அவரிடம் பேசமுடியும். ஓரிரு நிமிடங்கள் அவருடன் பேசினாலே தெளிவாகி விடுவோம். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகச் சிந்தித்து செயல்படக்கூடியவர்.
ஒரு படத்துக்காக உழைக்கும் கடைக்கோடி தொழிலாளிகள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை கொடுப்பார் அவரது இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்புவதற்கு இதுதான் காரணம்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஸ்.
தொடர்ந்து நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் தான் நடிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா கூறியுள்ளார்.