ஈரானில் யுரேனியம் தொடர்பில் தொடரும் குழப்பம் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

ஈரானின் அணுச்சக்தித் தளங்களை அமெரிக்கா தாக்குதவதற்கு முன் அங்கிருந்து யுரேனியம் இடம் மாற்றப்பட்டதாக எந்த உளவுத்தகவலும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுச்சக்தித் திட்டம் உண்மையில் தடைபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிறுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய 3 அணுச்சக்தித் தளங்களை அடியோடு அழித்ததாக அது வலியுறுத்துகிறது.
எனினும் ஐரோப்பிய உளவுத்துறை அறிக்கைகள் ஈரானின் யுரேனிய இருப்பு பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
ஈரானின் அணுச்சக்தித் திட்டத்தைச் சில மாதங்கள் மட்டுமே பின்தங்க செய்துள்ளதாக அமெரிக்காவின் கசிந்த புலனாய்வு அறிக்கையும் குறிப்பிட்டுள்ளது.
அணுச்சக்தித் தளங்களிலிருந்து யுரேனியம் இடம் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. செயற்கைக்கோள் வழி எடுக்கப்பட்ட படங்களில் அணுச்சக்தித் தளங்களுக்கு வெளியே பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
யுரேனியம் இடம் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மறுத்தார்.
ஈரான் அவ்வாறு செய்வதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கும் என கூறியுள்ளார்.