பிரெஞ்சு பாலியல் குற்றவாளி மீது புதிய வழக்கு பதிவு செய்த மகள்

பிரெஞ்சு பாலியல் குற்றவாளி டொமினிக் பெலிகோட்டின் மகள் தனது தந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்ததாகக் தெரிவித்துள்ளார்.
டொமினிக் பல அந்நியர்களுடன் சேர்ந்து தனது தாயார் கீசெல் பெலிகோட்டை மீண்டும் மீண்டும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
மகளான கரோலின் டேரியன், டொமினிக் பெலிகோட் தனக்கு போதைப்பொருள் கொடுத்து தனக்கு எதிராக “பாலியல் துஷ்பிரயோகம்” செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டொமினிக் பெலிகோட் தனது குற்றங்கள் குறித்த விரிவான பதிவுகளில் தனது நிர்வாண மற்றும் மயக்கமடைந்த உடலின் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், தன்னையும் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிப்பதாக டேரியன் தெரிவித்துள்ளார்.
(Visited 30 times, 1 visits today)