இலங்கை

புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் குறித்த தகவல்!

இலங்கை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டு பணம் 2022 ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இது 205.1 மில்லியன் அமெரிக்க டாலர் (82.4%) அதிகரிப்பாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மார்ச் 2023 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய 568 மில்லியன் டொலர்களைக் காட்டிலும், தற்போது குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் இலங்கை தொடர்ந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் பதிவு செய்துள்ளதுடன், மொத்த வரவு 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்