ஆசியா

மோசடி வழக்கில் டுருவோங் மை லான்னுக்கு மரண தணைடனையை இறுதி செய்த வியட்நாம் நீதிமன்றம்

வியட்னாமின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து லான் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த வியட்னாமிய நீதிமன்றம் மரண தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) தீர்ப்பளித்தது.

68 வயது லான், SCB வங்கி மூலம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. லான் கிட்டத்தட்ட 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்துள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடுமையான தண்டனை என்றும் அதை நீதிமன்றம் மனிதாபிமான முறையில் குறைக்க வேண்டும் என்று லான் மேல்முறையீட்டின்போது கோரினார்.

லான் செய்தது பெரிய குற்றம். அதனால் தண்டனையை குறைக்கமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

லானின் கணவரும் மேல்முறையீட்டின் போது இருந்தார். வங்கி விதிமுறைகளை மீறியதற்காக லான் கணவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரும் தமது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்