ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து!! இவர்களின் திருமணம் செல்லாது..! நீதிமன்றம் அதிரடி
தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவில் ரூ.30 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
அதே போல் தன்னுடைய நடிப்பின் திறமையால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த பெருமை தனுஷுக்கு உண்டு. நடிகர் தனுஷின் வளர்ச்சியில் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பங்கு முக்கியமானது.
ஐஸ்வர்யா தான் தனுஷுக்கு பல விஷயங்களில் பக்க பலமாக இருந்தவர். அதேபோல் தனுஷ் இன்று ஆங்கிலத்தை சரளமாக பேச முக்கிய காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான்.
2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா – லிங்கா என்கிற இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுமுகமாக விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
நவம்பர் 21 ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி முன்பு விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, நேற்று இவர்களின் விவாகரத்துக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், இவர்களின் விவாகரத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும்… இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் முழுமையாக தங்களுடைய திருமண உறவில் இருந்து பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.