நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்’ – சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது உடல்நிலை குறித்த கவலைகளை நிராகரித்துள்ளார்.
விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோ செய்தியில், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், கடுமையான உடற்பயிற்சியின் காரணமாக அவரது உருவத்தில் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Xecycle, Treadmill மற்றும் Weightlifting போன்ற பயிற்சிகளை அவர் தொடர்ந்து செய்கிறார்.
இங்கு வந்தபோது இருந்த உடல் எடை தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சுனிதாவின் படங்கள் அவரது கன்னங்கள் சோர்வாக இருப்பதைக் காட்டியது.
அவர்களின் உடல்நிலை குறித்தும் வைத்தியர்கள் கவலை தெரிவித்தனர்.
ஜூன் மாதம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் ஆய்வுக் கப்பலில் எட்டு நாள் பணிக்காக விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
இருப்பினும், ஸ்டார்லைனர் ஆய்வு செயலிழந்து திரும்பாமல் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.