வாழ்வியல்

இதயத்தை பாதுகாப்பாக காக்க உதவும் பழங்கள்

நாளுக்கு நாள் மாரடைப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவு, பதற்றம், அழுத்தம், இறுக்கம் என இவை அனைத்தும் நம் வாழ்வில் அதிகரித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில், நம் இதயத்தை மிக பாதுகாப்பாக பேணி பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும்.

நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. இதயம் இயங்கும்வரைதான் நாம் இருப்போம். ஆகையால் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது உடலையும் பலவீனப்படுத்துகிறது. இதய பிரச்சனைகள் உடலுக்கே கூட ஆபத்தாக அமையலாம்.

முன்னர் வயதானவர்களுக்கும், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே ஏற்பட்ட இதய நோய்கள் இப்போது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. நாளுக்கு நாள் இதய நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகின்றது. மார்பு வலி, விறைப்பு, அழுத்தம், அமைதியின்மை, சுவாசிப்பதில் சிரமம், கழுத்து, தாடை, தொண்டை, மேல் வயிறு அல்லது முதுகு ஆகிய பகுதிகளில் வலி, கால்கள் அல்லது கைகளில் வலி, உணர்வின்மை போன்றவை பலவீனமான இதயத்தின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இதய பாதுகாப்பை உறுதி செய்யும் உணவுகளை தேர்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இவற்றில் முதன்மையானவை பழங்கள். பழங்கள் சுவையானவையாக இருப்பதோடு இதயத்திற்கும் இவை அதிக அளவில் நன்மை பயக்கும். தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சாப்பிட வேண்டிய பழங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பெர்ரி (Berries)

பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அவற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் ஒரு கைப்பிடி பெர்ரிகளை உட்கொள்வதால் இதயத் தமனிகள் வலுவடையும்.

ஆப்பிள் (Apple)

ஆப்பிள் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பழமாகும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆப்பிளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. காலை உணவில் அல்லது சிற்றுண்டியாக இதை உட்கொள்ளலாம்.

வாழைப்பழம் (Banana)

வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் அபாயம் குறைகிறது. இது செரிமானத்தையும் சீராக்குகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் ஒரு ஆற்றல் மூலமாகவும் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மாதுளை (Pomegranate)

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை இதயத்தின் தமனிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இதுமட்டுமின்றி இதனால் தமனிகளில் வீக்கம் குறைகிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான