பொழுதுபோக்கு

கடுப்பான ஆர்.ஜே. பாலாஜி… ஆண் தெய்வமாக வரப்போகும் சூர்யா…

சூர்யா 45 படத்தின் ஹீரோயின் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. ரூ.300 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில், 38 மொழிகளில் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் அதிக திரையரங்குகளில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

கங்குவா படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் நடந்து வருகிறது.

அதேபோல் சூர்யா 44 படம் நடந்து கொண்டிருக்கும்போதே சூர்யா45 படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியானது.

இப்படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவுக்கு ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலும், பிடி சார் படத்திலும் நடித்த காஷ்மிரா இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்படத்தின் கதை மற்றும் ஹீரோயினை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ஹிட்டானது. இப்படத்தின் 2 வது பாகத்திலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுந்தர்.சி இயக்குனர் என அறிவிப்பு வெளியானது.

See also  "அவரது மரணத்தின் நினைவுகள் தாங்கிக் கொள்ள முடியாதவை" தந்தை குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்...

வாய்ப்பு கிடைக்காததால் கடுப்பான பாலாஜி இப்படத்திற்குப் போட்டியாக திரிஷா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி மாசாணி அம்மன் படத்தை இயக்க ஆர்.ஜே.பாலாஜி முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

திரிஷாவின் கால்ஷுட் கிடைக்காத நிலையில், இப்படத்தை ஹீரோ சப்ஜெக்ட்டாகவும், மாசாணி அம்மன் கதையை ஆண் தெய்வத்தின் கதையாக ஆர்.ஜே.பாலாஜி மாற்றி அதை சூர்யாவுக்கு ஏற்றபடி மாஸாக அதிரடி ஆக்சன் கலந்து உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதில், மூக்கு அம்மன் படத்தில் நடித்த நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content