இரு தோழிகள் எடுத்த தவறான முடிவு: பொலிஸார் தீவிர விசாரணை

குருணாகல் – வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தில் இரண்டு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
52 மற்றும் 49 வயதுடைய திருமணமாகாத இரண்டு தோழிகளே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் 14 வருட காலமாக தோழிகளாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 29 times, 1 visits today)