பொழுதுபோக்கு

Rolls Royce Ghost காரை விற்கும் விஜய்… விலை என்ன தெரியுமா.?

விஜயிடம் தற்போது பிஎம்டபிள்யூ, மினி கூப்பர், இன்னோவா, ஆடி, டொயோட்டா என ரக ரகமான கார்கள் இருக்கின்றன. இதன் விலை மட்டுமே பல கோடிகளைத் தாண்டும்.

ஆனாலும் அவரிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கார் ஆரம்பத்திலேயே அவருக்கு பஞ்சாயத்தை தான் கொண்டு வந்தது.

அந்த கார் தற்போது எம்பயர் ஆட்டோஸ் என்னும் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

அந்த வலைதள பக்கத்தில் விஜயின் கார் அனைத்து கோணங்களிலும் படம்பிடிக்கப்பட்டு முழு விவரங்களுடன் செய்தியாக வெளியாகி இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அந்த காரில் சிறு கீறல் கூட கிடையாது.

புத்தம் புதுசு போல் இருக்கும் அந்தக் கார் சர்வீஸ் செய்யப்பட்டு நன்றாக ஓடும் கண்டிஷனில் இருக்கிறது. இதன் ஓடோமீட்டர் ரீடிங் 22,000 கிலோமீட்டர். காரின் அனைத்து எலக்ட்ரானிக் அம்சங்களும் பக்காவாக இருக்கிறது.

அதன்படி இந்த காரின் விலை 2.6 கோடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விலை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளப்படும். 2012ல் விஜய் இந்த காரை வாங்கும் போது இதன் விலை 3.5 கோடி ஆகும். இப்படியாக விஜய் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காரை தற்போது விற்பனைக்கு விட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட விற்பனை தொகையை தாண்டி எக்ஸ்ட்ராவாக பணம் செலுத்த தேவையில்லை எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் காரை யார் வாங்க போகிறார்கள் என்பதும் சர்ப்ரைசாக உள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content