பொழுதுபோக்கு

ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்ன? நீதா அம்பானி கூறிய உண்மை

இந்தியப் பணக்காரர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கு அண்மையில் மிக விமர்சையாக திருமணம் இட்பெற்றது.

ஆனந்த் அம்பானி முன்னதாக உடல் இளைத்து காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

திருமண நிகழ்வில் பேசிய அனந்த் அம்பானி, “என்னுடைய வாழ்க்கை மலர்ப் படுக்கையால் ஆனது அல்ல. சிறு வயதில் இருந்தே உடல் நலம் சார்ந்து நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்” என்று பேசி கண்கலங்கினார். இதுவும் இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக அவரின் தாய் நீதா அம்பானி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,

“அனந்த் அம்பானி ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்து வருகிறார். இதனால் ஒபிசிட்டி என்னும் உடன் பருமன் பிரச்சினை, அவருக்கு ஏற்பட்டது” என்று தெரிவித்து இருந்தார்.

உடல் சார்ந்த பிரச்சினைகளால் அப்போது அதிகபட்சமாக 208 கிலோ வரை அனந்துக்கு உடல் எடை அதிகரித்துள்ளது. எனினும் கடுமையான உடல் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் ஆனந்த் 108 கிலோ எடையைக் குறைத்தார்.

அவரின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் வினோத் சன்னா, 18 மாதங்களில் அதைச் சாத்தியப்படுத்தினார். இவர் பிரபலங்களான ஜான் ஆபிரஹாம், ஷில்பா ஷெட்டி, விவேக் ஓபராய், ஹர்ஷவர்தன் ராணே உள்ளிட்டோருக்கு பயிற்சியளராக இருந்தவர்.

ஆனந்த் அம்பானி Crash diet என்னும் உணவுப் பயிற்சிக்குப் பதிலாக, தனக்கே உரித்தாக வினோத் சன்னாவால் உருவாக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினார். அவர் ஒவ்வொரு நாளும் 1,200 முதல் 1,500 வரையான கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் அவரின் டயட்டில் அதிகம் இருந்தன.

அதேபோல ஆனந்த் அம்பானி கடுமையான உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றினார். யோகா, உடல் பலத்துக்கான பயிற்சி, உடலை நெகிழ்வாக்கும் பயிற்சிகள் மற்றும் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதேபோல ஆனந்த் அம்பானி தினந்தோறும் 5 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்தார். தசைகளை மெல்லியதாக உருவாக்குதல், கலோரிகளை எரித்து, ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தினார். ஆனந்த் அம்பானி தினந்தோறும் சுமார் 21 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்தார்.

உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் போதிய உறக்கம், அழுத்தத்தைக் கையாளுதல், அலுவலகம் – வாழ்க்கை சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றினார். அதனால், அனந்த் அம்பானி இயற்கையாகவே ஒன்றரை ஆண்டுகளில் 108 கிலோ வரை எடையைக் குறைத்தார்.

எனினும் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அனந்த் அம்பானி எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், அவரின் உடல் எடை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்