இலங்கை செய்தி

யாழ். இளையோரிடம் 75 இலட்சம் மோசடி – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமார்ந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்

மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரை 40 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை