பொழுதுபோக்கு

சூரிதான் சூப்பர் ஸ்டார்… பிரபல விமர்சகர் டுவிட்

தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகர் என்றால் சூரியை குறிப்பிடலாம். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

ஆனால் இந்த சந்தேக கேள்விகளுக்கெல்லாம் நெத்திய அடியாய் அமைந்தது விடுதலை பாகம் ஒன்று. விடுதலைப் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தனக்கு காமெடி மட்டுமல்ல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க வரும் என சூரி நிருபித்துக் கட்டினார்.

இதனால் விடுதலை பாகம் ஒன்று வெளியான உடனே ரசிகர்கள் விடுதலை படத்தின் பாகம் 2 எப்போது வரும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

வெற்றிமாறன் மட்டுமில்லாமல் சூரி இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

அதேபோல் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டை குவித்து வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்திலும் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார்.

இந்நிலையில் சூரியின் நடிப்பில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியான படம் கருடன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை என்றாலும் திரை கதையை தனது அசாத்திய நடிப்பால் சூரி ஓவர்டேக் செய்துள்ளார் என்று கூறவேண்டும்.

இப்படியான நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸிற்குச் சென்றுள்ள நடிகர் சூரி அங்கு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பலரும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக ஒரு சிலர் மதுரை டூ லாஸ் வேகாஸ் எனவும் பரோட்டா சூரி டூ கதாநாயகன் சூரி எனவும் ஒரு சிலர் தலைவர் சாயல் தெரிகின்றதே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சூரியின் புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் சூரி என கேப்சன் இட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர் சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரும் சூப்பர் ஸ்டார் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content