ஐரோப்பா

பிரித்தானியாவில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு..!

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளது.

ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது. அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது.

பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இல்லை என பதிலளித்தது பில்லி.

ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி.மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது பில்லி.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்