பொழுதுபோக்கு

தனது மகள் குறித்து மகிழ்ச்சியடையும் கிங்காங்.. அப்படி என்ன செஞ்சிட்டாங்க?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பிரபலங்களின் பிள்ளைகள் எல்லாம் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் கிங்காங் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பலரும் அவருக்கும் அவரது மகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அதை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

52 வயதாகும் நடிகர் கிங்காங் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் எஸ். சக்தி பிரியா எனும் மகள் தான் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளார். சங்கர் எனும் தனது பெயரை சினிமாவுக்காக கிங்காங் என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் கிங்காங்கின் மகள் சக்தி பிரியா 12-ஆம் வகுப்பு தேர்வில் 404 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த சந்தோஷத்தை ட்விட்டர் பக்கத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வெளியிட்டிருந்தார் கிங்காங்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்