30 வயதிற்கு மேல் அதிக சதம் அடித்த கிரிக்கெட் வீரர்கள்!
ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது.
அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், கில்லும் சதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதில் ரோஹித் சர்மா அணியின் மூத்த வீரராகவும், அணியின் கேப்டனாகவும் தனது பொறுப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக செய்து உள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 30-வயதுக்கு மேல் சர்வதேசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த பட்டியலில் ரோஹித் சர்மா 4-வதாக இடம் பிடித்துள்ளார். அவர் அடித்த இந்த சத்தத்தின் மூலம், இந்த தொடரில் 2 முறையாகவும், டெஸ்ட் கேரியரில் 12-வது முறையாகவும், டெஸ்ட் உலகக்கோப்பையில் (WTC) -யில் இதோடு 9-வது முறையாகவும் பூர்த்தி செய்துள்ளார்.
30 வயதுக்கு மேல் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியல் :-
43 – குமார் சங்ககாரா – இலங்கை
36 – மேத்யூ ஹைடன் – ஆஸ்திரேலியா
36 – ரிக்கி பாண்டிங் – ஆஸ்திரேலியா
35 – ரோஹித் சர்மா* – இந்தியா
35 – சச்சின் டெண்டுல்கர் – இந்தியா
34 – தில்ஷன் – இலங்கை
இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மாவை தவிர மற்ற வீரர்கள் எல்லாரும் ஓய்வை அறிவித்து விட்டனர்.